நடிகர் சூர்யாவை ஒருநாள் கடன் தருவீர்களா? 15 வருட ரசிகைக்கு ரிப்ளை கொடுத்த ஜோதிகா..!

 
1
பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்களுக்கிடையே உருவான நட்பு, பின்பு காதலாக மாறி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறுதியில் திருமணத்தில் முடிந்தது.

இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் சூர்யா, ஜோதிகாவுக்கு தியா என்கின்ற பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து 2010 ஆம் ஆண்டில் தேவ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

ஒரு கட்டத்தில் தனது பிள்ளைகள் வளர்ந்த பின் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார்  ஜோதிகா. தற்போது தமிழில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு 18 ஆண்டு காலமாக தமது திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து வரும் இந்த தம்பதியினர் அண்மையில் பின்லாந்துக்கு சென்ற சுற்றுலா வீடியோ  ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், சூர்யாவின் 15 வருட ரசிகை ஒருவர் ஜோதிகாவின் பதிவில், சில்லுனு ஒரு காதல் படத்தில் நீங்கள் ஐஸ்வர்யாவுக்கு உங்கள் கணவரை ஒருநாள் கடன் கொடுத்தது போல எனக்கும் ஒரு நாள் கடன் தருவீர்களா? என கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு ஜோதிகா, 'அதற்கெல்லாம் அனுமதி இல்லை' என ஒரு ரிப்ளையும் கொடுத்துள்ளார். தற்போது இது வைரலாகி உள்ளது.

From Around the web