மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்களா..? நமீதா சொன்ன பதில் இதுதான்..!

 
நமீதா மாரிமுத்து

சமூகவலைதளத்தில் ரசிகர்களிடம் உரையாற்றிய போது பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்வீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நமீதா மாரிமுத்து சுவராஸ்யமான பதிலளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பார்வையாளர் வட்டம் உண்டு. புதியதாக ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசனில் இதுவரை 4 எலிமினேஷன்கள் நடந்துள்ளன.

ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஆறாவது நாளிலேயே திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் அவர் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் பிக் பாஸ் 5-ல் மறுபடியும் wildcard என்ட்ரியாக செல்வீர்களா என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிகளித்துள்ள திருநங்கை நமீதா, இதை நீங்கள் பிக் பாஸ்-இடம் தான் கேட்க வேண்டும் என பதில் கூறியிருக்கிறார்.

From Around the web