வெங்கட்பிரபுவின் லேட்டஸ்ட் பதிவால், கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்..!

 
11

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வெளியாகி நேற்று முன்தினம் இரண்டு வருடங்கள் ஆனதை அடுத்து அந்த படத்தின் குழுவினர்கள் தங்களது சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவு செய்தனர். இந்த நிலையில் ’மாநாடு’ படம் குறித்த சிம்புவின் பதிவிற்கு பதிலளித்த வெங்கட் பிரபு ’லூப் தொடர்கிறது’ என்று பதில் அளித்துள்ளார்.

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் ’மாநாடு’ படத்தில் லூப் கதை, ’தளபதி 68’ படத்தில் தொடர வாய்ப்பு இருப்பதாக விஜய் ரசிகர்களும், ’மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று சிம்பு ரசிகர்களும் அடுத்தடுத்து பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் லூப் கதையை முதன்முதலாக வித்தியாசமாக திரையில் காட்டிய வெங்கட் பிரபு அதனை ’தளபதி 68’ படத்திலும் வைப்பாரா? அல்லது ’தளபதி 68’ படத்தை முடித்தவுடன் ’மாநாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 


 

From Around the web