பிரபல நடிகையை கன்னத்தில் அடித்த பெண் போலீஸ்.. சில நிமிடங்களில் சஸ்பெண்ட்..!
Jun 7, 2024, 06:05 IST
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்றார். இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் அவர் எம்பி ஆக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சண்டிகர் விமான நிலையத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு இருந்த பெண் போலீசார் கங்கனா ரனாவத் கன்னத்தில் பளாரென அறைந்ததாக தெரிகிறது.
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கங்கனா ரனாவத் பேசியதாகவும் அதற்காகத்தான் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பெண் போலீஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.