சூர்யா 45 படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பெண்..!

நடிகர் சூர்யா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். மே மாதம் 1 ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள "ரெட்ரோ " படம் வெளியாகவுள்ளது.
“ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் ரெடிதான்” பாடலில் 500 டான்சர்கள் நடனமாடினார்கள். அதே போன்ற ஒரு பாடலை ஆர்ஜே பாலாஜி “சூர்யா 45” திரைப்படத்திற்காக உருவாக்கி வருகிறாராம்.
500 டான்சர்கள் கொண்ட இந்த பாடலை உச்சி வெயிலில் படமாக்கி வந்தாராம். இந்த நிலையில் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் ஒரு பெண் டான்சர் மயங்கி விழுந்துவிட்டாராம். அந்த டான்சரின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் இல்லையாம். இந்த சம்பவம் தகவலாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.