சோழர்களோடு மோத வரும் பாண்டியர்கள்- கவனமீர்க்கும் ‘யாத்திசை’..!!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் அதேநாளில், அறிமுக இயக்குநர் தயாரித்துள்ள’யாத்திசை’ என்கிற சரித்திரக் கால பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் வெளிவரவுள்ளது.
 
 
yaathisai

மறைந்த கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நாவலை படமாக உருவாகியுள்ளார் மணிரத்னம். இதனுடைய முதல் பாகம் பெரியளவில் வெற்றி அடைந்த நிலையில், இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளிவருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக மற்றுமொரு வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதுதான் யாத்திசை. இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்கிற புதுமுக இயக்குனர் தான் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் யாத்திசை திரைப்படம் பாண்டியர்களின் வரலாற்றைப் பின்னணியாக கொண்டு உருவாகி உள்ள படமாகும். மறுபுறம் பொன்னியின் செல்வன் 2 சோழர்களின் வரலாற்றைப் பேசும் படமாக ரிலீஸாக உள்ளது. இப்படி பாண்டியர்களும், சோழர்களும் பாக்ஸ் ஆபிஸ் யுத்தத்தில் மோதிக் கொள்வதைக் காண்பதற்கு ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

From Around the web