ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆனது யாத்திசை..!! 

முற்றிலும் புதியவர்கள் முயற்சியில் உருவான ‘யாத்திசை’ திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளிவந்துள்ளது. இதனால் திரையரங்கு வெளியீட்டை விடவும் ஓ.டி.டி-யில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
yaathisiai

பழங்கால தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த தொல்குடி ஒன்று பாண்டிய மன்னனுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. அந்த வரலாற்றை மையப்படுத்தி உருவான கதை தான் ‘யாத்திசை’. தரணி ராஜேந்திரன் என்பவர் இயக்கிய இப்படத்தில் மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட இந்த படத்தில் நடித்திருந்தனர்.

கடந்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்துக்கு விமர்சகர்கள் வட்டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய முயற்சி என்று தெரியாத அளவுக்கு மிகவும் நேர்த்தியான கதையமைப்பு மற்றும் பழங்காலத்தில் பேசப்பட்ட தமிழ் மொழி என யாத்திசை படத்தில் நிறைய ஆச்சர்ய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

ஆனால் திரையரங்குகளுக்கு தான் கூட்டம் வரவில்லை. பலரும் ஓ.டி.டி-க்கு வரும் பார்த்துவிடலாம் என்று எண்ணினர். அதன்படி தற்போது யாத்திசை திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு திரையரங்கத்தை விடவும், ஓ.டி.டி-யில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web