புது வீட்டுக்கு குடி புகுந்த யஷ் மற்றும் ராதிகா பண்டிட் தம்பதி..!

 
மனைவி ராதிகா பண்டிட்டுடன் நடிகர் யஷ்

பெங்களூருவில் நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டிட் சொந்தமாக வாங்கியுள்ள வீட்டுக்கான புதுமுனை புகுவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ படம் மூலம் தேசியளவில் பிரபலமானார். அதை தொடர்ந்து ‘கேஜிஎஃப்-2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் யஷ் சமீபத்தில் பெங்களூருவில் புதிய வீடு வாங்கினார். அதனுடைய புதுமனை புகுவிழா நேற்று முன் தினம் நடந்தது. இதில் யஷ் மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா பண்டிட் இருவரும் வேள்வி வளர்த்து வழிபாடு நடத்தினர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலர் யஷ் மற்றும் ராதிகா பண்டிட் வீடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web