சிறுமி பாலியல் வழக்கில் கைதான பிரபல நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு..!

 
பியர்ல் பூரிக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

படப்பிடிப்பின் போது  5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகர் பியர்ல் வி பூரிக்கு தமிழ் நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியில் தயாராகி வரும் தொலைக்காட்சி தொடருக்கான ஷூட்டிங்கில் நடித்து வரும் பிரபல நடிகை தன்னுடைய 5 வயது மகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சக நடிகர் பியர்ல் வி பூரி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து மும்பை சிறையில் 14 நாட்கள் போலீஸ் காவலில் பியர்ல் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், நடிகர் பியர்ல் பூரியை எனக்கு தெரியும். அவர் மிகவும் மென்மையான மனிதர்.  கனிவான உள்ளம் கொண்டவர். விரைவில் உண்மை அனைவருக்கும் தெரியவரும். எனது நண்பர் மீதான கலங்கம் துடைக்கப்படும் என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.


முன்னதாக தமிழில் சாமுராய், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்த அனிதா ஹசானந்தனி தற்போது பாலிவுட் சீரியல்களில் நடித்து வருகிறார். அவரும் பியர்ல் பூரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பியர்ல் பூரி மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை கிடையாது. அது உண்மையாகவும் இருக்க முடியது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
 

From Around the web