ஆமா சார் நான் ஒரு ஏழ்மையான ஆன்மா.. என்னிடம் PR க்கு கொடுக்க போதுமான பணம் இல்லை - பிக்பாஸ் வர்ஷினி..!

 
1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆண்கள், பெண்கள் என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு இடையே டாஸ்க்குகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த போட்டி சுவாரசியமாக இல்லை என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தார்கள்.

இதை தொடர்ந்து இரண்டு அணிகளுக்கு இடையே வீட்டிற்கு நடுவில் போடப்பட்ட கோடு எடுக்கப்பட்டு ஒரே அணியாக விளையாட அனுமதித்தார் பிக் பாஸ்.  அதன் பின்பு நடைபெற்ற டெவில்ஸ் ஏஞ்சல்ஸ் டாஸ்கின் போது போட்டியாளர்கள் பலரும் தமது உண்மையான முகத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் வர்ஷினி இருந்த வரைக்கும் எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாகவே காணப்பட்டார். இறுதியாக அவர் எலிமினேட் ஆகி செல்லும் போதும் மிகுந்த சந்தோஷத்துடன் சென்றிருந்தார். 

இந்த நிலையில், வர்ஷினி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் தன்னை கேலி செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவருடைய பதிவு அமைந்துள்ளது.

அதன்படி அவர் பதிவில், ' ஆமா சார் நான் ஒரு ஏழ்மையான ஆன்மா.. என்னிடம் PR க்கு கொடுப்பதற்கு போதுமான பணம் இல்லை.. அதற்கான மனமும் என்னிடம் இல்லை.. அதனால் தான் நான் வெளியேறினேன்..' என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவருடைய பதிவு வைரல் ஆகி வருகின்றது.

இதேவேளை வர்ஷினி வெங்கட் வெளியிட்ட பதிவிற்கு,  'நீங்க ஒரு சுத்தமான ஆன்மா அண்ட்  பிக்பாஸ் வீட்டில் நீங்க சிறந்தவர்..' என தயாரிப்பாளரும் பிக் பாஸ் சீசன் எட்டில் கலந்து கொண்டவருமான ரவீந்தர் பதிலளித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்

From Around the web