இவங்க யாருடைய மகள்-ன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்..!!

சமீபத்தில் சமூகவலைதளங்களில் இளம்பெண் ஒருவருடைய புகைப்படம் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் யாரென்று நெட்டிசன்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
 
நடிகை கவுதமி மகள் சுப்புலக்ஷ்மி

சமூகவலைதளத்தில் இளம்பெண் ஒருவருடைய புகைப்படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் பிரபலமான நடிகை ஒருவருடைய மகள் என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மிகவும் தீவிரமாக எதையோ கவனிக்கும் இளம்பெண் ஒருவருடைய புகைப்படம் வைரலானது. அந்த பெண் தமிழ் சினிமாவில் நடித்து வரும் புதுமுக நடிகை என்றும், சர்வதேச பிரபலம் என்றும் கூட செய்திகள் வெளியாகின. 

ஆனால் அவர் நடிகையெல்லாம் கிடையாது. அவர் ஒரு பிரபலமான நடிகையின் மகள் என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி புகைப்படத்தில் இருந்த இளம்பெண்ணின் பெயர் சுப்புலக்ஷ்மி என்றும், அவர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை கவுதமியின் மகள் என்று தெரியவந்துள்ளது.

மகளுடன் கவுதமி

மேலும் தனது மகளின் தற்போதைய புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானால் நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை கவுதமி, தமிழில் ‘குரு சிஷ்யன்’ படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், கடந்த 1998-ம் ஆண்டு தொழிலதிபர் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார். 

அந்த தம்பதிக்கு கடந்த 1999-ம் ஆண்டு சுப்புலக்ஷ்மி என்கிற மகள் பிறந்தார். அதே ஆண்டில் கவுதமி கணவரை பிரிந்து மீண்டும் சென்னைக்கு குடிபெயர்ந்தார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமாவில் நடிக்க துவங்கிய போது, கடந்த 2004-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் பழக்கம் ஏற்பட்டது. 

அவர்கள் இருவரும் ஒன்றாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த நிலையில், 2016-ம் ஆண்டு கமல்ஹாசனை பிரிவதாக கவுதமி அறிவித்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ள கவுதமி, பா.ஜ.க கட்சியில் இணைந்து பல்வேறு இடங்களில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

From Around the web