சிறகடிக்க ஆசை தொடரில் பிரபல நடிகர் திடீர் விலகல்..!!
தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்று வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் இருந்து முக்கிய நடிகர் விலகியுள்ளதை அடுத்து, அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
May 26, 2023, 18:56 IST
சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிப்பாகத் துவங்கிய தொடர் ‘சிறகடிக்கும் ஆசை’. விகடன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த தொடரில் புதிய முகங்கள் பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குறிப்பாக இந்த சீரியலின் ஜோடிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு எதார்த்த கதைகளத்தில் தொடர் ஒளிபரப்பாகி வருவதால், பார்வையாளர்களிடையே மிகுந்த ஆதரவு கிடைக்கத் துவங்கியுள்ளது.
முன்னதாக இந்த சீரியலில் நடிகை மைனாவின் கணவரும் நடிகருமான யோகேஷ், ஹீரோவின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் அவர் தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

அவருக்கு பதிலாக வேறொரு புதிய முகம் தொடருக்குள் நடிக்க வந்துள்ளார். அவருடைய அறிமுகக் காட்சி இன்று முதல் தொடரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)