மலையாள சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு- அதுவும் இவர் படத்தில்..!!
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், கவனிக்கத்தக்க குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மண்டேலா திரைப்படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
தமிழைத் தவிர ஷாரூக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் என்கிற இந்திப் படத்தில் நடித்துள்ளார். மேலும் அட்லி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
ஜெய ஜெய ஜெய ஹை படம் மூலம் பிரபலமான விபின் தாஸ் இயக்கும் குருவாயூரம்பாலா நடையில் என்கிற படம் மூலம் மலையாள சினிமாவில் யோகி பாபு கால்பதிக்கிறார். இதை தனது சமூகவலைதள பக்கத்தில் இயக்குநர் விபின் தாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
குருவாயூரம்பல நடையில் படத்தில் பிருத்விராஜ், பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான திரைக்கதையை சிறுபுரம் தீர்த்த குன்றிராமாயணம் படத்தின் எழுத்தாளர் தீபு பிரதீப் எழுதியுள்ளார்.
இ4 எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்களில் மஞ்சு பிள்ளை, சரத் சபா மற்றும் ஹரிஷ் பென்கன் ஆகியோர் நடிக்கின்றனர்.
 - cini express.jpg)