வலிமை படத்தில் யோகி பாபு..? ரசிகரின் கேள்வியால் வெளியான ரகசியம்..!

 
அஜித்

வலிமை படத்தில் நடிகர் அஜித்துடன் மீண்டும் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதை குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியின் மூலம் உண்மை தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோரை தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் முத்திரை பதிக்கும் நடிகராக மாறிவிட்டார் யோகி பாபு. சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் பெரியளவிலான பட்ஜெட் என பல்வேறு படங்களில் அவர் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ரசிகர்களுடன் அண்மையில் யோகி பாபு கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் தளபதி 65 படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆமாம் அன்பரே. இந்த தகவல் உண்மை தான் என கருத்து பதிவிட்டு இருந்தார்.

ஏற்கனவே யோகி பாபு அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். அதனால் இவர் வலிமை படத்தில் இடம்பெறுவது குறித்து பல்வேறு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் யோகி பாபு உரையாடி போது, அவர் வலிமை படத்தில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இல்லை என்றும் சொல்லாலும், ஆமாம் என்றும் சொல்லாமலும் ஒருவாரு மலுப்பலாக பதில் தெரிவித்துள்ளார். இதனால் அவர் வலிமை படத்தில் நடித்திருக்கக்கூடும் என ரசிகர்கள் கருதுகின்றனர். 

From Around the web