பெண் இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோவான யோகி பாபு..!
 

 
யோகி பாபு

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர் யோகி பாபுவின் அடுத்த படத்தை பெண் இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார்.

செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்கி ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் அவருக்கு உதவியாளராக பணியாற்றியவர் லதா. தொடர்ந்து செல்வராகவன் சிம்பு கூட்டணியில் உருவாகவிருந்த ‘கான்’ படத்திலும், அவருடைய இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களுக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் பணியாற்றினார்.

தற்போது இவர் யோகி பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் இல்லை. ஆனால் யோகி பாபு நடிப்பில் முன்னதாக வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதன் காரணமாக இந்த படமும் சமூகநலனை மையப்படுத்திய படமாக இருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தை வெற்றி அடையச் செய்யும் நோக்கில் பல்வேறு கமர்ஷியல் அம்சங்களுடன் இந்த படம் தயாராகலாம் என தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web