யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயின் ஓவியா..!!

 
யோகி பாபு மற்றும் ஓவியா

நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த ஓவியா தமிழில் வெளியான ‘களவாணி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மூடர் கூடம், கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆனால் அதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது தான் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதன்மூலம் பெரியளவில் ரசிகர் வட்டத்தை அவர் பெற்றார்.

அதை தொடர்ந்து களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். எனினும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெறும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மட்டும் அவர் அவ்வப்போது பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் அன்கா மீடியா என்கிற நிறுவனம் தயாரிக்கும் யோகி பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஓவியா. இன்று இந்த படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளது. அப்போது படக்குழு குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web