அட்லீ இயக்கும் படத்தில் மீண்டும் ஷாரூக்கானுடன் இணைந்த யோகி பாபு..!

 
ஷாரூக்கான் மற்றும் யோகி பாபு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு, மீண்டும் ஷாரூக்கானுடன் இணைந்து பாலிவுட் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. தமிழ்நாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஷாரூக்கானுடன் சேர்ந்த சில நகைச்சுவை காட்சிகள் யோகி பாபு நடித்தார். இந்நிலையில் அட்லீ இயக்கி வரும் ஷாரூக்கான் படத்திலும் யோகி பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் நகைச்சுவை கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கும் படத்தில் ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதற்கான ஷூட்டிங் புனேவில் துவங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நயன்தாரா மற்றும் தங்கல் பட புகழ் சானியா மல்ஹோத்ரா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

மேலும் வலுவான மற்றொரு கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கிறார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். வெறும் 6 மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

From Around the web