சொந்தமாக கோயில் கட்டி பூரண கும்ப மரியாதையை ஏற்ற யோகி பாபு..!

 
நடிகர் யோகி பாபு கட்டிய கோயில்
திருவண்ணாமலையில் நடிகர் யோகி பாபு புதியதாக கட்டியுள்ள கோயிலில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தமிழ் திரைத்துறையின் முன்னணி காமெடி நடிகராக காலூன்றிவிட்டார் யோகி பாபு. மறைந்த நடிகர் விவேக் நடிக்க வேண்டிய படங்களில் அவருக்கு பதில், பலரும் யோகி பாபுவை தான் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். சந்தானம், சதீஷ் உள்ளிட்டோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டதால் நகைச்சுவை நடிகர்களில் யோகி பாபுவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தீவிர முருக பக்தரான இவர், தன்னுடைய திருமணத்தை கூட திருத்தணி முருகன் கோயிலில் எளிமையாக நடத்தினார். அவ்வப்போது தன்னுடைய சமூகவலைதளங்களிலும் முருகன் படத்தை பதிவிடுவார். மகனுக்கு கூட விசாகன் என்று முருகப் பெருமானின் பெயரை வைத்துள்ளார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் நகரம் பேடு என்கிற கிராமத்தில் புதியதாக நிலம் வாங்கியுள்ளார் யோகி பாபு. அங்கு வராகி அம்மனுக்கு சொந்த செலவில் கோயில் கட்டியுள்ளார். இதற்கான குடமுழுக்கு விழா விமர்சையாக நடந்தது. அதில் குடும்பத்துடன் கலந்துகொண்ட யோகி பாபு பூரண கும்ப மரியாதையை ஏற்றார்.

From Around the web