நட்புக்காக காசு வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனமாடிய யோகி பாபு..!

 
நட்புக்காக காசு வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனமாடிய யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்திற்கான விளம்பர பாடலில் காசு வாங்கமால் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரபல படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ படத்தை சக்திவாசன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான விளம்பரப் பாடல் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் நடித்துக் கொடுத்துள்ள காமெடி நடிகர் யோகி பாபு படக்குழுவிடம் காசு வாங்கவில்லை என தெரியவந்துள்ளது. தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இதனால் யோகி பாபுவுக்கு நன்றி தெரிவித்துள்ள தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணா, அவர் மிகவும் எளிமையானவர் என்றும் ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து எந்தவித சிரமும் தராமல் பாடலில் நடித்துக் கொடுத்ததாக தெரிவித்தார். வரும் 23-ம் தேதி ‘நாயே பேயே’ படம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 

From Around the web