மொட்டை ராஜேந்திரனுக்கு சிபாரிசு செய்தார் யோகிபாபு..?

 
மொட்டை ராஜேந்திரனுக்கு சிபாரிசு செய்தார் யோகிபாபு..?

காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படம் ‘வீரப்பனின் கஜானா’.இப்படத்தை புதுமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.

இந்த படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது,

“காட்டிற்கும் மனிதனுக்கும் பிரிக்கப் முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. ஆதி மனிதன் காட்டில் தான் வாழ்ந்தான். பிறகு நாகரிகம் வளர்ச்சியடைந்து கிராமம், நகரம் என்று மாறியது. இருப்பினும் காட்டின் மீது அனைவருக்கும் எப்போதும் ஒரு மோகம் இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக குழந்தைளுக்கு காடு பற்றிய ஆர்வமும் கற்பனையும் அதிகம் உண்டு. காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படம் தான் ‘வீரப்பனின் கஜானா’.

மேலும், வீரப்பன் சம்பந்தமான காட்சிகள் படத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளன. குரங்கு, யானை, புலி என குழந்தைகளை குதூகலப்படுத்தும் அம்சங்களும் படத்தில் உள்ளன.

ராஜேஷ், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தேவா, பூஜா, கேத்தரின் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரபாதீஸ் சாம்ஸ் தயாரித்து வருகிறார். தென்காசி, குற்றாலம், நாகர்கோவில் பகுதிகளில் படம் வளர்ந்துள்ளது” என்றார்.

படத்தில் நடித்து வரும் யோகிபாபுவும், மொட்டை ராஜேந்திரனும் நண்பர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சிபாரிசு செய்து வருகிறார்கள். இந்த படத்துக்காக மொட்டை ராஜேந்திரனுக்கு சிபாரிசு செய்தவர், யோகிபாபு தான் என்கிறார்கள்.

From Around the web