நீங்க ரொம்ப நல்ல நடிக்கிறீங்க சார்...  பகத் பாஸிலின் லெலிட் செய்யப்பட்ட வீடியோ இதோ...

 
11

த. செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , ரானா டகுபதி , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

கடந்த சில நாட்களாக வேட்டையன் படத்தின் வசூல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது நாட்டில் இடம் பெறும் கனமழை காரணமாக வசூல் வேட்டை சரிந்துள்ளது. எனினும் வேட்டையன்  படத்தின் அதிகார்வ பூர்வ வசூல் விபரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், வேட்டையன் படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சியை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் பகத் பாஸில் ரஜினியிடம் நீங்கள் கேட்டது இதுதான் எனக் கூற, அதற்கு ரஜினி சூப்பரா என்று கூறிவிட்டு இனிமேல் என் கிட்ட வேலை செய்ய வேண்டாம் உனக்கு சேப்டி கிடையாது வேலூர் எஸ்பி இடம் சொல்லி இருக்கேன் கொஞ்ச நாள் அவர்கிட்ட வேலை செய் என்று சொல்லுகின்றார்.

அதற்கு பகத் பாஸில் சார் நான் உங்க டிபார்ட்மெண்ட்க்கு வேலை செய்யல உங்களுக்குத்தான் வேலை செய்கின்றேன் நீங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் நான் முன்ன  மாதிரியே எங்கேயாவது போய் திருடி வாழ்ந்திடுவேன் என்று சொல்கின்றார்.

தற்போது இவ்வாறு வெளியான வேட்டையன் டெலிட் செய்யப்பட்ட காட்சி பார்ப்பதற்கு காமெடியாக காணப்படுகின்றது. இதனை பார்த்து என்ஜாய் பண்ணுமாறு லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

From Around the web