கோபியை திட்ட உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா கெட்ட வார்த்தைல திட்டாதீங்க ப்ளீஸ்.. ! வீடியோ வெளியிட்ட கோபி..!

இதற்கிடையில் ராதிகாவின் அம்மா செய்த சதியினால் கோபியும் ஈஸ்வரிக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கின்றார். இது பாக்கியா வீட்டார்களுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீரியலில் பாக்கியா உடன் கோபி வாழ்ந்தபோது கெத்தாகவும் கம்பீரமாகவும் காணப்பட்டார். ஆனால் ராதிகாவை கல்யாணம் செய்த பிறகு கோமாளி போலவும் முட்டாளாகவும் அவரது கேரக்டர் காணப்பட்டது. இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோபி கேரக்டரை தொடர்ந்து கண்டபடி திட்டி வருகின்றார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில், தற்போது இந்த கேரக்டரில் நடிக்கும் சதீஷ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், கோபி கேரக்டரை நீங்க என்ன வேண்டும் என்றாலும் சொல்லி திட்டுங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டாம். தமிழ் எவ்வளவு அழகான வார்த்தை அதை தவறாக பயன்படுத்த வேண்டாம் என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அவருடைய வீடியோ வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களும் அவருக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றார்கள்.