உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம்...உடனே இதை செய்ய வேண்டும்..ஆர்த்திக்கு ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ்..!

 
1

சமீபகாலமாக ரவி மோகன் தன் சொந்த வாழ்க்கையில் சில கஷ்டங்களை சந்தித்து வருகின்றார். ரவி மோகன் ஆர்த்தி ரவி ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரவி மோகன் ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ரவி மோகன் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதை தடுக்க கோரி, மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் இனி தங்களின் பிரச்சனை குறித்து சமூக தளங்களில் பதிவிட கூடாது என உத்தரவிட்டது. மேலும் இவர்களை பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்ப சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இனிமேல் சோஷியல் மீடியாவில் எந்த கருத்துகளையும் பதிவிட கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில் இன்று ரவி மோகன் ஆர்த்திக்கும் அவரின் தாய் சுஜாதா விஜய்குமாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த வக்கீல் நோட்டீஸில், சமூக தளங்களில் தன்னை பற்றி பதிவிட்ட அவதூறு கருத்துக்களை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறி இருக்கின்றார் ரவி மோகன். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அணைத்து சோஷியல் மீடியா தளங்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார் ரவி மோகன்.

From Around the web