உங்களுக்கு 48 மணிநேரம் தான் கெடு..! வக்கீல் நோட்டீஸ் கொடுத்த கெனிஷா பிரான்சிஸ்..!

மேலும் ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து விஷயத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தொடர்ந்து கூறி வருகிறார் கெனிஷா. உண்மை நிச்சயம் வெளியே வரும். அன்று உங்களுக்கு தெரியும் என்கிறார். இந்நிலையில் தனக்கு பலாத்கார மிரட்டல், கொலை மிரட்டல் விடுத்து போடப்பட்ட கமெண்ட்டுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு கடவுளே இதை எல்லாம் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றார்.
மேலும் நான் தவறு செய்திருந்தால் நீ என்னை எரித்துவிடு இறைவனே என்றார் கெனிஷா. இருப்பினும் கெனிஷாவை சமூக வலைதளங்களில் விளாசுவது நிற்கவில்லை. இந்நிலையில் தான் வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார் கெனிஷா.
அதாவது தன்னை பற்றி வெளியான செய்திகள், வீடியோக்கள், மோசமான கமெண்ட்டுகள், மோசமான புகைப்படங்கள் ஆகியவற்றை 48 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கெனிஷா சார்பில் அவரின் வழக்கறிஞர் எச்சரித்திருக்கிறார்.
தன்னால் எந்த குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் வரவில்லை என கெனிஷா பிரான்சிஸ் தொடர்ந்து கூறி வருகிறார். தான் வெறும் காலுடன் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது தனக்கு ஆறுதலும், தைரியமும் சொன்னவர் கெனிஷா என அண்மையில் அறிக்கை வெளியிட்டார் ரவி மோகன்.
தன் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா என்றார் அவர். இதையடுத்து அறிக்கை வெளியிட்ட ஆர்த்தியோ, அந்த ஒளி நம் திருமண வாழ்க்கையில் இருளை கொண்டு வந்துவிட்டது என்றார். ஆர்த்தியின் அறிக்கையை பார்த்ததும் அவரின் ஆதரவாளர்கள் கெனிஷா பிரான்சிஸை மேலும் விமர்சித்தார்கள்.
தன்னை அப்படி விமர்சித்த பலரை பெயருடன் எக்ஸ்போஸ் செய்து ஸ்டோரி போட்டிருந்தார் கெனிஷா. அப்படியும் விளாசல் அடங்காத நிலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
தங்களின் திருமண வாழ்க்கையில் மூன்றாவது நபர் வந்ததால் தான் பிரச்சனையே என்றார் ஆர்த்தி. மேலும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறினார். ஆர்த்தி சொன்ன அந்த மூன்றாவது நபர் கெனிஷா தான் என ரசிகர்கள் அவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே ஆர்த்தியும், ரவி மோகனும் அறிக்கை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கெனிஷா பிரான்சிஸ் இன்ஸ்டா ஸ்டோரி மூலம் தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும், வீடியோவும் வைரலான பிறகே கெனிஷா பிரான்சிஸை சமூக வலைதளவாசிகள் விமர்சிக்கத் துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.