உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு தான்...  ரோட்டு கடையில் விரும்பி சாப்பிடும் கீர்த்தி சுரேஷ்..! 

 
1

கேரளாவில் முன்னணி தயாரிப்பாளரின் மகளாக திகழ்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதிலும் இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் படத்தில் இடம்பெறும் உன்மேல ஒரு கண்ணு என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதில் இவருடைய எக்ஸ்பிரஷன்கள் எல்லாம் மிகவும் கவரப்பட்டது.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ரோட்டுக்கடை ஒன்றில் நின்று கொண்டு சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளன.

பொதுவாகவே சினிமா நட்சத்திரங்கள் என்றார் 5 ஸ்டார் ஹோட்டல்களில் தான் சாப்பிடுவார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் பாராபட்சம் பார்க்காமல் ரோட்டு கடையில் இருந்து சாப்பிட்ட வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். 

From Around the web