”சேர்ந்து படம் பண்ணலாம்னு சொன்னீங்களே” கே.வி. ஆனந்த் மறைவுக்கு கதறும் சிம்பு..!
பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு திரைத்துறைக்கு ஒரு பேரிழப்பு என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரான கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அவருடைய மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியை தருகின்றன. மரணம் எதிர்பாராதது என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள், நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்கள் எதிர்பாராமல் உயிரிழப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கே.வி. ஆனந்த் அதிர்ந்து கூட பேச முடியாது. அவருடைய இயக்கத்தில் வெளியான கோ படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது அந்த படத்தில் நடிக்க முடியாமல் போயிவிட்டது. அண்மையில் நாங்கள் இருவரும் ஒரு கதை குறித்து பேசியிருந்தோம். விரைவில் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லியிருந்தார்.
இதுகுறித்து தினமும் பேசி வந்தோம். நேற்று கூட இதுதொடர்பாக பேசினோம். ஆனால் இப்போது அவர் உயிரோடு இல்லை என்று சொல்வது மிகவும் வேதனையளிக்கிறது. கேவி. ஆனந்த் மரணம் பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது. இவ்வளவு சீக்கரம் அவர் உயிரிழந்தது வருத்தத்தை தருகிறது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)