கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளம் தயாரிப்பாளர் உயிரிழப்பு..!
 

 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளம் தயாரிப்பாளர் உயிரிழப்பு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இளம் திரைப்பட தயாரிப்பாளர் ம. கலைச்செல்வன் உயிரிழந்த செய்தி தமிழ் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா இணைந்து நடித்த படம் ’தாதா 87’. இந்த படத்தை விஜய் ஸ்ரீஜி என்பவர் இயக்கி இருந்தார், கலைச் சினிமாஸ் சார்பில் ம. கலைச்செல்வன் என்பவர் தயாரித்திருந்தார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் கலைச்செல்வனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா முதலாம் அலை அதிகரித்த போது லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சுவாமிநாதன் (62) கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web