உங்கள் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துள்ளது - நடிகர் சூர்யா..!!

 
1

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,  “ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.


 

From Around the web