உங்கள் ஜீ தமிழில்..! நயன்தாராவின் 'அன்னபூரணி'
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் உலக தொலைக்காட்சியின் முதல் பிரீமியர் காட்சி ஜீ ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.வரும் ஜூலை 28-ம் தேதி மதியம் 1:30 மணி முதல் 4:30 மணி வரை இந்த அன்னபூரணி திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திறமையான நிலேஷ் கிருஷ்ணா இயக்கி, நடிகை நயன்தாரா லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இந்த திரைப்படத்தில் ஜெய், பூர்ணிமா, கார்த்திக் குமார், சத்யராஜ், லாஸ்லியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதையானது அன்னபூரணி என்ற இளம் பெண்ணைச் சுற்றி சுழல்கிறது, அன்னபூரணி என்ற பெண் சமையலை நேசிப்பதோடு, வீட்டாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தவிர்க்கும் முயற்சியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைத் தொடர முயற்சிக்கிறாள், அன்னபூரணியின் இந்த பயணம் சதிவேலை, இழப்பு என பல சவால்களை கொண்டதாக உள்ளது. இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் தலைசிறந்த சமையல்காரராகவதை தனது இறுதி இலக்காக வைத்து தொடர்ந்து பயணித்து செல்கிறாள். அன்னபூரணி தடைகளை வென்று தன் கனவை அடைவாளா? இல்லையா? என்பதை அறிய இந்த ஜூலை 28 ஆம் தேதி ஜீ தமிழில் காண தயாராகுங்கள்.