நானே வருவேன் பட அப்டேட்டை வெளியிட்ட யுவன்..!

 
யுவன்சங்கர் ராஜா

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் அப்டேட் குறித்த தகவலை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் தனுஷ், அங்கு நடைபெற்று வந்த ‘ தி கிரே மேன் ‘ ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார். இதற்கிடையில் ரஜினிகாந்த் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இப்போது தனுஷ் அவருடன் உதவியாக இருக்கிறார்.

அடுத்த மாத தொடக்கத்தில் தனுஷ் இந்தியா திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வந்தவுடன் கார்த்திக் நரேன் இயக்கும் டி- 43, செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ ஆகிய படங்களுக்கான ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இதற்கிடையில் பல்வேறு புதிய படங்களுக்கான டிஸ்கஷனிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் நானே வருவேன் படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, அதன்படி நானே வருவேன் படத்திற்கான இரண்டாவது பாடல் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ரசிகர்கள் அதை கேட்கலாம் என தெரிவித்துள்ளனர்.

அநேகமாக தனுஷின் இந்திய வரவின் போது, படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளுக்காக படக்குழு இப்பாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web