யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலம்.. 2 நாயகிகளுடன் டூயட்..!

 
1

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரியோ ராஜ் ’கனாக்காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் பிரபலமானார். அதன் பின் ’சரவணன் மீனாட்சி’ சீசன் 3 உள்பட ஒரு சில சீரியல்களிலும் பிக் பாஸ் உள்பட விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். 

இந்த நிலையில் ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் திரை உலகில் நாயகனாக மாறிய ரியோ ராஜ் அதன் பிறகு 'பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற படத்தில் நடித்தார். மேலும் கடந்த ஆண்டு அவர் நடித்த ’ஜோ’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க ரியோ ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

1

மேலும் இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் இருவருடன் சேர்ந்து ரியோ ராஜ்க்கு  ஒரு டூயட் பாடலை யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை அறிமுகம் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

From Around the web