விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஜீ தமிழ் சீரியல் நடிகை!

 
1

மக்கள் மத்தியில் தமக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்காக விஜய் டிவி மற்றும் சன் டிவி தொடர்ந்து போட்டி போட்டு ரியாலிட்டி ஷோ, சீரியல்கள் என புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருகின்றன.

ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சீரியல் முடிவடைவதற்கு முன்பே அதற்கான ப்ரோமோக்களை வெளியாக்கி மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.  

இந்த நிலையில், விஜய் டிவியின் புதிய சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் சீரியல் நடிகை ஜமுனா களமிறங்கியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் உயிரிழந்த ஆவியாக சுற்றும் சித்ரா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ஜமுனா. இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் யாரடி நீ மோகினி சீரியல் மூலம்  மிகவும் பிரபலமானார்.

சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என பழமொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வந்த இவர், தற்போது சின்னத்  திரையில் கலக்கி வருகிறார். வெயில், ஜிகர்தண்டா டபிள் எக்ஸ், கொலை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

முதன் முதலில் அபூர்வ ராகங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ஜமுனா, இதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. பிறகு மீண்டும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஆன 'வீட்டுக்கு வீடு வாசல் படி' என்ற சீரியலில் ஜமுனா நடிக்கின்றார். இந்த சீரியலுக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

From Around the web