சீயான் 60 கதை லீக்: வாணி போஜனால் தலையில் அடித்துக் கொண்ட கார்த்திக் சுப்புராஜ்..!
விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தின் கதை முழுவதையும் பிரபல நிகழ்ச்சியில் நடிகை வாணி போஜன் உளறிக் கொட்டியதால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளராம்.
ஜகமே தந்திரம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் ‘சீயான் 60’ படத்தை துவங்கவுள்ளார். கொரோனா காரணமாக படத்திற்கான ஆரம்பிக்கட்ட பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த படத்தில் விக்ரம், அவருடைய மகன் த்ருவ், சிம்ரன் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் சிலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவுள்ளனர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை வாணி போஜன், சீயான் 60 படத்தின் முழு கதையையும் தெரிவித்துள்ளார். படத்தின் முதல் பாதி காதல் நிரம்பி இருக்கும், பிற்பகுதியில் ஆதிரடி அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் தன்னுடைய படங்கள் குறித்த செய்திகளில் சீக்ரெட் காப்பார். ஆனால் அதற்கு முந்திகொண்டு வாணி போஜன் பேசி இருப்பது படக்குழுவை மிகவும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
 - cini express.jpg)