கடினமான உழைப்புக்கு கிடைத்த பரிசு...இது வெறும் வீடு இல்லை இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு - அன்ஷிதா..!

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் அன்ஷிதா.பிக் பாஸ் வீட்டில் அன்ஷிதா நடந்து கொண்ட விதம் பார்வையாள்கள் பலருக்கும் பிடித்துவிட்டது. 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார் அன்ஷிதா. சொந்தமாக வீடு ஒன்று வேண்டும் என ஆசைப்பட்டார் அவர். இந்நிலையில் அவரின் ஆசை நிறைவேறிவிட்டது.

சொந்தமாக வீடு கட்டி குடியேறியிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, இது புது துவக்கம், கனவு இல்லம், என் கனவு நினைவாகிவிட்டது. இது வெறும் வீடு இல்லை இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. தூக்கமில்லாத இரவுகள், அமைதியான பிரார்த்தனைகள், கடினமான உழைப்புக்கு கிடைத்த பரிசு என தெரிவித்திருக்கிறார்.

மேலும் எதுவாக இருந்தாலும் தனக்கு ஆதரவாக இருந்து வருபவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அன்ஷிதா. தனக்கு தன் மீதே நம்பிக்கை இல்லாத நேரங்களில் கூட நம்பிக்கை வைத்து ஊக்கிவித்தவர்களை அன்ஷிதா மறக்கவில்லை. மேலும் தன்னை கஷ்டப்படுத்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

From Around the web