வீட்டு வேலைக்கு சென்ற 14 வயது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர்..!

 
வீட்டு வேலைக்கு சென்ற 14 வயது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர்..!

படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு வீட்டு வேலைக்கு சென்று வந்த 14 வயது சிறுமியை அக்கா கணவர் உட்பட 12 பேர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான 14 வயது சிறுமி 6-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறகு குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்துவிட்டு தனது அக்கா வீட்டில் தங்கி வீட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அந்த சிறுமியை அவருடைய அக்காவின் கணவர் சின்ராஜ் தனது மனைவிக்கு தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் சிறுமியை மிரட்டி சின்ராஜின் நண்பர்களான குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோரும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுதவிர  சிறுமி வேலைக்கு சென்ற இடத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் பன்னீர் உட்பட மூர்த்தி, கண்ணன், அபி. கோபி, நாய் சேகர், சங்கர், சரவணன் ஆகியோரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒருகட்டத்தில் இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் ப்ரியாவிடம் இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து அந்த புகார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்த வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை கைது செய்துவிட்டனர். ஒருவர் தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

From Around the web