கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி- டிக்டாக் பிரபலம் பார்க்கவ் கைது..!

 
கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி- டிக்டாக் பிரபலம் பார்க்கவ் கைது..!

டிக்டாக்கில் பிரபலமாக வலம் வந்த ஃபன் பக்கெட் பார்க்கவ்ர் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய புகாரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த பார்க்கவ் என்கிற இளைஞர் டிக்டாக் சமூகவலைதளத்தில் ஃபன் பக்கெட் (Fun Bucket) பார்க்கவ் என்கிற பெயரில் பல்வேறு சுவாரஸ்யமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவருடைய நகைச்சுவையான குறும்புத்தனமான வீடியோக்கு என்று தனி ரசிகர் வட்டம் உருவானது.

இந்நிலையில் 14 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக அவர் மிகுந்து புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை எடுத்துள்ள ஹைதராபாத் காவல்துறை இளைஞர் பார்க்கவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் பார்க்கவ் உடன் சேர்ந்து வீடியோவில் நடித்து வந்த சிறுமியை குறிப்பிட்டு பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் பதற்றமடைந்த அந்த சிறுமி, பார்க்கவால் பாதிக்கப்பட்டவர் தான் கிடையாது என்று கூறி விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பார்க்கவுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வந்த சிறுமி பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியான C/o காஞ்சரபாளையம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web