ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தை!! பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்!

 
1

குஜராத் மாவட்டம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் கிராமத்தில் கூலித்தொழிலாளி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு அருகில் உள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சிவம், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் கால் தடுமாறி விழுந்தான்.

gujarat

குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் பதைபத்துப் போய் அழுது கூச்சலிட்டனர். இவர்களின் அழு குரலை கேட்ட கிராமத்தினர் விரைந்து வந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கிடைத்ததும், அவர்கள் உள்ளூர் பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவிற்கு தகவல் கொடுத்தனர்.

உள்ளூர் நிர்வாகம் இராணுவம், அகமதாபாத் மாநகராட்சி மற்றும் காவல்துறையின் உதவியையும் நாடியது. இதையடுத்து ராணுவம், பொலிஸார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10:45 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டான்.

பின்னர் சிறுவன் திரங்காத்ரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான், இப்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது.


 

From Around the web