2 வயது ஆண் குழந்தை, 2 மாத பெண் குழந்தை உட்பட 6 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை..!

 
2 வயது ஆண் குழந்தை, 2 மாத பெண் குழந்தை உட்பட 6 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை..!

ஆந்திராவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது இரண்டு மாத பெண் குழந்தை உட்பட 6 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஜூட்டாட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். தன்னுடைய வீட்டில் மனைவி உஷா, அதே குடும்பத்தைச் சேர்ந்த ரமாதேவி, அருணா, 2 வயது ஆண் குழந்தை உதய், 2 மாத பெண் குழந்தை ஊர்நிஷா ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இன்று அதிகாலை அந்த வீட்டுக்குள் புகுந்த அப்பல்ராவ் என்பவர் இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட அனைவரையும் கொடூரமாக வெட்டிக் கொன்றார். பிறகு அங்கே இருந்து தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார்.

இவர்களுடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஆறு பேரின் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

அதை தொடர்ந்து கொலை நடந்த பகுதியில் தலைமறைவான அப்பல்ராவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 

From Around the web