நாமக்கலில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு சிறுமி கடத்தல்..!!

 
1

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் - கௌசல்யா. இந்த தம்பதியினருக்கு ஜெய்சன் என்ற மகனும், மவுலனிசா என்ற மகளும் உள்ளனர். சிறுமி மவுலனிசா, அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

லாரி ஒட்டுநரான சரவணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், கௌசல்யாவும், மவுலனிசாவும் நேற்றிரவு வெப்பம் காரணமாக மாடியில் கட்டில் போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் கௌசல்யாவின் தம்பியுடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர், கௌசல்யா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்ட கும்பல், கௌசல்யாவையும், ஜெய்சனையும் கட்டிபோட்டுவிட்டு, சிறுமி மவுலனிசாவை கடத்தி சென்று விட்டதாகவும்  கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிறுமியின் தாயார் கெளசல்யா கொடுத்த புகாரின் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிறுமியை மீட்க 6 தனிப்படை அமைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

From Around the web