இளம் பெண்ணுடன் ரூமில் முன்னாள் அமைச்சர்..!! மனைவியிடம் சிக்கினார்..!!  

 
1

முன்னாள் மத்திய அமைச்சரும், இரண்டு முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர் பரத்சிங் சோலங்கி. குஜராத் காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர், வேறு ஒரு பெண்ணுடன் தனிமையில் ஹோட்டல் அறையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bahratsinh-solain

பரத்சிங் சோலங்கி வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை கையும் களவுமாகப் பிடித்த அவரது மனைவி ரேஷ்மா படேல், ஹோட்டல் அறைக்குள் புகுந்து அவரை அம்பலப்படுத்தினார். இணையத்தில் வைரலாக பரவும் அந்த வீடியோவில் பரத்சிங் சோலங்கியின் மனைவி ரேஷ்மா படேல் சிலருடன் ஹோட்டல் அறை ஒன்றில் நுழைகிறார்.

பின்னர் அந்த இளம் பெண்ணுடன் இருந்த பரத் சிங் சோலங்கியை ரேஷ்மாவும் அவருடன் சென்றவர்களும் தாக்கியிருக்கிறார்கள்.இதை பாரத்சிங் சோலங்கி தடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இருப்பினும் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்கும் ரேஷ்மா படேல், 'நீ என் கணவருடன் இருக்கிறாய்... நான் உன்னை விடமாட்டேன்...' என்று கூறிக் கொண்டே ஆவேசமாகத் தாக்குகிறார்.

இந்த ஆண்டு இறுதியில குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரசுக்கு இந்த வீடியோ தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.


 

From Around the web