நீ இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ விரும்பல..ரயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை!! 

 
1

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த நான்கு ஆண்டுகளாகப் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதல் இரு குடும்பத்திற்கும் தெரிந்து பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

Avadi

இதையடுத்து விரைவில் திருமணம் செய்ய  முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கிறிஸ்டோபரின் காதலி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கிறிஸ்டோபர், தனது சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில், “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

பின்னர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் கிறிஸ்டோபர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆவடி ரயில்வே போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dead

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.

From Around the web