திருவள்ளூர் அருகே பயங்கரம்..!! இரண்டு முறை காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி!! 3வது முறை சடலமாக மீட்பு!! 

 
1

திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பாபு (36). பள்ளி பேருந்து ஓட்டுனரான இவருக்கு அமுதா (30) என்கிற மனைவியும், ஜெயஸ்ரீ (10) என்ற மகளும், கிஷோர் (7) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், அமுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, திடீரென அமுதா கணவன், குழந்தைகளை விட்டு விட்டு ஜோதீஸ்வரனுடன் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு, பல இடங்களில் மனைவியை தேடிய போது, புதுச்சேரியில் இருப்பதாக தெரியவந்தது. உடனே உறவினர்கள் சென்று அமுதாவை அழைத்து வந்து பாபுவிடம் சமாதானம் பேசி விட்டுவிட்டு சென்றனர்.

மீண்டும், சில நாட்கள் கழித்து அமுதா ஜோதீஸ்வரனுடன் சென்றார். பின்னர் உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் பாபுவுடன் சேர்த்து வைத்தனர். அதற்கு பிறகு சிறிது நாட்கள் தான் அமுதா இருந்தார். பின்னர் 3வது முறையாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு வழக்கம்போல் அமுதா ஜோதீஸ்வரனுடன் சென்றுவிட்டரா. இதனால் அதிர்ச்சியடைந்த பாபு, பல இடங்களில் தேடினார். எந்த தகவலும் இல்லை.

Periyakuppam

இந்நிலையில் பாபுவின் நண்பரான சிவபிரகாசம், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் கம்பர் தெருவுக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் ஜோதீஸ்வரனுடன் அமுதா குடும்பம் நடத்தி வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், உடனே இந்த தகவலை பாபுவிடம் கூறியுள்ளார். ஆனால் பாபு, கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் சிவபிரகாசம் அமுதாவை சந்தித்தார்.

அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அமுதா கூறி அழுதுள்ளார். அதனால் அவர் மீது இரக்கப்பட்ட சிவபிரகாசம், ‘பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அவரிடம் நீ பேசி குடும்பம் நடத்தும் வழியை பார்’ என்று அறிவுரை கூறியுள்ளார். அதன்படி புழல் பகுதியில் சந்திக்க ஏற்பாடு செய்து அமுதாவை வரவழைத்தார். பாபுவை அழைத்து கொண்டு சிவபிரகாசமும் வந்தார். அப்போது அமுதா, ‘ஜோதீஸ்வரன் என்னை ஏமாற்றி விட்டார். என்னை செத்து போ’ என்கிறார். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். என்னை மன்னித்து வாழ்க்கை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு பாபு, நீயாகவே சென்றாய், 2 முறை திருந்தி வாழ வழி செய்தேன். அதற்கு பிறகும் நீ சென்று விட்டாய், இனி நான் எப்படி அழைத்து செல்ல முடியும் என்று கூறிவிட்டு சென்றார். இந்நிலையில், பெரியகுப்பம் கம்பர் தெருவில் வசித்து வந்த வீட்டில் அமுதா இறந்து கிடப்பதாக நேற்று சிவபிரகாசத்துக்கு தகவல் கிடைத்து. உடனே அவர் பாபுவுக்கு தெரியப்படுத்தினார். அவரும் நேரில் சென்று பார்த்தார். அப்போது உடல் அழுகிய நிலையில் அமுதா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Tiruvallur

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் பாபு புகார் அளித்தார். அதில், ‘எனது மனைவி இறப்பில் சந்தேகம் இருக்கிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் அமுதா குடும்பம் நடத்தி வந்ததால் தற்போது அவர் மாயமாகி விட்டார். அவரை பிடித்து விசாரித்தால்தான் உண்மையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web