கர்ப்பிணி பெண்ணை நாசமாக்கிய டாக்டர்..!! 

 
1
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் பெஜேரா (32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவரும் இவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் வழக்கமான பரிசோதனைக்கு இந்த மருத்துவரை மீண்டும் அணுகியுள்ளார். அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் மருத்துவர் பெஜேரா. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள், அவரது அறையில் இருக்கும் இரகசிய கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை பார்த்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் பெஜேரா மீது காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரிக்கையில், அவர் இதுவரை சிகிச்சைக்கு வந்த 5 பெண்களிடம் இது போன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web