லேத் பட்டறையில் கல்லூரி மாணவர் பலியான சோகம்!

 
1

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரி சங்கர் (17). இவர் காங்கேயத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை நாள் என்பதால் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான லேத் பட்டறையில் ஹரி சங்கர் பணிக்கு சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஹரி சங்கர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Erode

இதுகுறித்து ஹரி சங்கர் பெற்றோருக்கும் சிவகிரி போலீசாருக்கும் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகிரி போலீசார், மாணவனின் உடலை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

ஹரி சங்கர்  உயிரிழப்புக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் உபகரணங்கள் வழங்காமல்  ராஜ்குமார் அஜாக்ரதையாக இருந்தது தான் காரணம் எனக்கூறி அவரை கைது செய்ய கோரி ஹரி சங்கர் உறவினர்கள் சிவகிரி காவல் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Sivagiri-PS

பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web