இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... திருமணமான 2 ஆண்டுகளில் எடுத்த விபரீத முடிவு!

 
1

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கோவிந்தன் தெருவில் வசித்து வருபவர் ஜனார்த்தனன் (28). இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கௌசல்யா (23) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் கிருத்திகா என்கிற மகள் உள்ளார்.

dead

இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. அதனை கௌசல்யாவின் தாயார் ராஜேஸ்வரி சமாதானம் செய்து வைத்து வந்தார். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மனம் உடைந்த கௌசல்யா தனது குழந்தை கிருத்திகாவை தாயிடம் கொடுத்துவிட்டு குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டினுள் சென்று கதவினை பூட்டிக்கொண்டுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கௌசல்யா சேலையில் தூக்குப்போட்டு கொண்டுள்ளதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கௌசல்யாவை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது கௌசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Cheyyar-town-PS

இது குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினார். திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் அது குறித்து செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

From Around the web