15 வயது சிறுவன் சராமாரியாக வெட்டிக் கொலை- நண்பர்களின் வெறிச்செயல்..!!
சாலையில் கால்நடையாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூரிலுள்ள இந்திரா நகரைச் சேர்ந்த ரோஹித் (15) என்கிற சிறுவன் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஞாயிறன்று விடுமுறை என்பதால் நண்பர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்பகுதியிலுள்ள அங்காயி கோயில் அருகே சிறுவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம கும்பல் சிறுவனை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சிறுவன் மயங்கி கீழே விழுந்தான்.

இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறை, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. அதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் இந்திரா நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்துபோன சிறுவன் ரோஹித்தின் நண்பர்கள், கருத்துவேறுபாடு காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான கும்பலை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 - cini express.jpg)