மருமகனுக்காக வக்கலாத்து வாங்கப் போயி உயிரை விட்ட மாமியார்..!!
வீட்டு உரிமையாளரான மூதாட்டியை கொலை செய்து பணம் திருட முயன்ற அண்ணன், தங்கையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தரமணி பகுதியில் வசித்து வந்த சாந்தகுமாரி என்கிற மூதாட்டி மற்றும் அவருடைய மருமகன் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மேலும் அவர்களுடைய வீட்டிலுள்ள பீரோ உடைக்கப்பட்டு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பணம் மாயமாகி இருந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் குடியிருந்த பெண் மற்றும் அவருடைய சகோதரரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததை அடுத்து, போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதன்மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மூதாட்டி சாந்தகுமாரியின் மருமகன், வாடகைக்கு குடியிருந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனால் பெரும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்துறைக்கு போவதாக கூறியுள்ளார்.
அப்போது இந்த பிரச்னையில் குறுக்கிட்ட மூதாட்டி சாந்தகுமாரி, பணம் கொடுக்கிறேன் பிரச்னையை பெருசப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சாந்தகுமாரி பாதிக்கப்பட்ட பெண்ணும் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணும் அவருடைய சகோதரரும் மூதாட்டியை கொன்றுவிட்டு, பணத்தை திருடியுள்ளனர். அதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.