தோசையை வேறு டேபுளுக்கு கொடுத்த சப்ளையரின் காதை வெட்டி வெறிச்செயல்..!
 

 
தோசையை வேறு டேபுளுக்கு கொடுத்த சப்ளையரின் காதை வெட்டி வெறிச்செயல்..!

தோசையை வேறொரு டேபிளுக்கு மாற்றி கொடுத்ததால் சப்ளையரின் காதை வெட்டி கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் தன்னுடைய நண்பர் சப்பை சிவாவுடன் வெளிப்பாளையத்தில் படம் பார்க்க வந்துள்ளார். திரையரங்குக்கு செல்வதற்கு முன்னதாக இருவரும் சாப்பிட முடிவு செய்துள்ளனர்.

திரையரங்கிர்கு எதிரில் இருந்த ஒரு ஹோட்டல் கண்ணில் படவே அங்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு சப்ளையராக இருக்கும் பாஸ்கரனிடம்  தோசையை ஆர்டர் செய்துவிட்டு டேபிளில் காத்திருந்துள்ளனர். சிறிது நேரத்தில் பாஸ்கரன் தோசையுடன் வந்துள்ளார். ஆனால் அருண் குமார், சப்பை சிவா இருந்த டேபிளுக்கு போகமல் வேறொரு டேபிளில் தோசையை பரிமாறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண் குமார் பாஸ்கரிடனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அந்த சண்டையில் சப்பை சிவாவும் இணைந்துகொண்டார். இருவரும் சேர்ந்துகொண்டு பாஸ்கரை சராமரியாக தாக்கியுள்ளனர். முடிவில் சப்ளையர் பாஸ்கரனின் காது வெட்டப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த சம்பவம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஸ்கரனிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் அருண் குமார் மற்றும் சப்பை சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி  உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

From Around the web