காதலியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை- கள்ளக்காதலன் கைது..!

 
காதலியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை- கள்ளக்காதலன் கைது

சென்னை அம்பத்தூரில் 15 வயது சிறுமிக்கு பாலிய தொல்லை கொடுத்த சந்தீப் என்கிற நபரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

சென்னை கொரட்டூர் பகுதியிலுள்ள பிரியங்கா (37) என்பவர் கணவர் நரேஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தீப் (37) என்கிற நபருடன் ப்ரியங்காவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ப்ரியங்காவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு சிறுமியின் தாய் ப்ரியங்காவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸுக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, அம்பத்தூர் மகளிர் காவல் நிலைத்தில் புகார் கூறினார். ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சந்தீப் தன்னிடம் தவறாக இருந்த போது ப்ரியங்கா உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்கில் பதிவு செய்து, தாய் பிரியங்கா மற்றும் கள்ளக்காதலன் சந்தீப் ஆகிய இருவரையும் கடந்த 7-ம் தேதி கைது செய்தனர்.

From Around the web