மகளை அடித்த மருமகனை கத்தியால் வெட்டி படுகொலை செய்த மாமனார்..!

 
மகளை அடித்த மருமகனை கத்தியால் வெட்டி படுகொலை செய்த மாமனார்..!

மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற கணவர், மனைவியின் தந்தையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்த மாதம்மாள் தாய் வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.  அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல தாகர் முயன்றபோது, அதை மறுத்து வந்துள்ளார் மாதம்மாள்.

இந்நிலையில் நேற்று காலையும் மாதம்மாளை சந்திக்க வந்த சுதாகர் அவரை வழக்கம் போல வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவரும் வழக்கம் போல மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் மனைவியை அடித்துவிட்டார்.

இதை கேள்விப்பட்ட மாதம்மாளின் தந்தை சீனிவாசன், சற்றும் எதிர்பாராத வகையில் கத்தியை எடுத்து மருமகன் சுதாகரை சராமாரியாக தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்துப் போன சுதாகர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் கந்திலி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வரும் சுதாகரனை தருமபுரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சுதாகரன் உயிரிழந்தார். இதை தொடர்ந்து மாமனார் சீனிவாசன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 

From Around the web